ஆறுமுகநேரியில்பள்ளி ஆண்டு விழா


ஆறுமுகநேரியில்பள்ளி ஆண்டு விழா
x
தினத்தந்தி 22 Aug 2023 6:45 PM GMT (Updated: 22 Aug 2023 6:46 PM GMT)

ஆறுமுகநேரியில் பள்ளி ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரியிலுள்ள காயல்பட்டினம்-ஆறுமுகநேரி மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி கல்வி சங்க தலைவர் முகமது அப்துல் காதர் தலைமை தாங்கினார். பொருளாளர் வி.கே.எம். பாஸ்கரன், துணைத்தலைவர்கள் பெ.கணேசன், பசீர் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன் ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன், தொழிலதிபர் ஏ.டி. ஜானகிராமன் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றி, மாணவ மாணவியருக்கு பரிசு வழங்கினர்.

மாணவ மாணவியர் விளையாட்டுப் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இவ்விழாவில் நிர்வாக குழு உறுப்பினர்கள் இ.அமிர்தராஜ், ஜி. ராமசாமி உள்பட பலர் கலந்துக்கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவியர் செய்திருந்தனர்.


Next Story