அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலப் பாதையில் கலெக்டர் ஆய்வு


அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலப் பாதையில் கலெக்டர் ஆய்வு
x

பவுர்ணமி கிரிவல முன்னேற்பாடு பணிகள் குறித்து அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலப் பாதையில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை


பவுர்ணமி கிரிவல முன்னேற்பாடு பணிகள் குறித்து அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலப் பாதையில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

ஆடி மாதத்திற்கான பவுர்ணமி நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.25 மணிக்கு தொடங்கி 2-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 1.05 மணிக்கு நிறைவு பெறுகின்றது.

பவுர்ணமி முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் முருகேஷ் இன்று அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப் பாதையில் ஆய்வு செய்தார்.

அப்போது கோவிலில் பக்தர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் இலவச தரிசனம் செய்ய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பணியாற்ற வேண்டும். மேலும் போலீசார் எவ்வித அசம்பாவித சம்பவம் நடைபெறாத வண்ணம் கண்காணிப்பு பணி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

தண்ணீர் வசதி

அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் வேண்டும். கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு ஆங்காங்கே குடிநீர் வசதி அனுமதிக்கப்பட்ட இடத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

கிரிவலப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள கழிவறைகளை தூய்மையாக பராமரித்து உடனுக்குடன் கழிவறைக்கு தேவையான தண்ணீர் வசதியை ஏற்படுத்தி தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும்.

குப்பை தொட்டிகள் நிரம்பினால் உடனுக்குடன் குப்பைகளை தனியாக எடுத்து அதற்கான ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்க வேண்டும்.

அன்னதானம் நடைபெறும் இடம் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளை அலுவலர்கள் மற்றும் போலீசாருக்கு தெரிவித்தார்.

ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story