அருணஜடேஸ்வரர் கோவில் குடமுழுக்கு


அருணஜடேஸ்வரர் கோவில் குடமுழுக்கு
x

திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோவில் குடமுழுக்கு இன்று நடக்கிறது.

தஞ்சாவூர்

திருப்பனந்தாள்:

திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோவில் குடமுழுக்கு இன்று நடக்கிறது.

குடமுழுக்கு

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருப்பனந்தாளில் பிரஹன்நாயகி அம்பிகை சமேத அருணஜடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமானது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் குடமுழுக்கு நடந்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிக்காக கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி பாலாலயம் செய்யப்பட்டது.

திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து இன்று(வெள்ளிக்கிழமை) குடமுழுக்கு நடக்கிறது.இதை முன்னிட்டு கடந்த 3-ந் தேதி முதல்கால யாக பூஜைகள் தொடங்கியது. இதற்காக கோவிலின் அருகே 5 நவாக்கினி யாக குண்டங்களும், 2 நவாக்கினி யாக குண்டங்களும் என மொத்தம் 59 யாகம் குண்டங்களுடன் கூடிய பிரமாண்ட யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டது.

புனிதநீர் கலசங்கள்

யாகசாலை மண்டபத்தில் புனிதநீர் கலசங்கள் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. திருப்பனந்தாள் மண்ணியாற்றில் இருந்து புனிதநீர் எடுக்கப்பட்டு கலசங்களுக்கு தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு பூஜை நடந்தது.

தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கிட பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்கள் யானையின் மீது வைக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க தேவார திருவாசக பதிகங்களுடனும், பெண்கள் முலைப்பாரி எடுத்து கொண்டு ஊர்வலமாக வந்தனர். கோவிலின் நான்கு வீதிகளிலும் ஊர்வலம் சென்று கோவில் அருகே உள்ள யாகசாலையில் புனிதநீர் கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

இதில் தருமபுரம் ஆதீனம் கட்டளை தம்பிரான் சுவாமிகள், காசிமட அதிபர் எஜமான் சுவாமிகள், இளவரசு தம்பிரான் சுவாமிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று நடக்கிறது

நேற்று முன்தினம் திருவீதி விநாயகர், தேரடி விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும், நேற்று தருபுர ஆதீனம் ஊருடையப்பர் கோவில், காசி மடம் விஸ்வநாதர் கோவில்களுக்கும் குடமுழுக்கு நடந்தது. பிரஹன் நாயகி அம்பிகை சமேத அருணஜடேஸ்வரர் கோவில் குடமுழுக்கு இன்று(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.


Next Story