இண்டியம்பாளையம் அருகே மோட்டார்சைக்கிளில் சென்றவரைதுரத்திய காட்டு யானை


இண்டியம்பாளையம் அருகே மோட்டார்சைக்கிளில் சென்றவரைதுரத்திய காட்டு யானை
x

இண்டியம்பாளையம் அருகே மோட்டார்சைக்கிளில் சென்றவரை துரத்திய காட்டு யானை

ஈரோடு

டி.என்.பாளையம்

கடம்பூர் வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று நேற்று முன்தினம் மாலை வெளியேறியது. பின்னர் அந்த யானை இண்டியம்பாளையம் அருகே உள்ள ரோட்டில் வந்து நின்றது. அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவரை கண்டதும் யானை துரத்த தொடங்கியது. இதனால் அவர் மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றார். எனினும் யானை பிளிறிக்கொண்டே விடாமல் அவரை துரத்தியது. இதனால் அவர் மோட்டார்சைக்கிளை அப்படியே போட்டுவிட்டு தப்பி ஓடினார். எனினும் யானை ஆவேசமடைந்து மோட்டார்சைக்கிளை காலால் எட்டி உடைத்தது. பின்னர் அதை துதிக்கையால் தூக்கி வீசியது. இதனால் மோட்டார்சைக்கிள் சேதமானது. இதனை சற்று தூரத்தில் நின்றபடி வாகன ஓட்டி அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்தார். இந்த காட்சியை அந்த வழியாக வாகனங்களில் வந்த மற்றவர்கள் தங்கள் செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும், கடம்பூர் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதைத்தொடர்ந்து வாகன ஓட்டி நிம்மதி அடைந்து தனது மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார். இந்த சம்பவத்தால் இண்டியம்பாளையம் அருகே 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story