கூட்டணியை பொறுத்தவரைபா.ஜ.க. தலைமைதான் முடிவு செய்யும் ;கே.ஏ.செங்கோட்ைடயன் எம்.எல்.ஏ. பேட்டி
கூட்டணியை பொறுத்தவரை பா.ஜ.க. தலைமைதான் முடிவு செய்யும் என்று கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கூறினாா்.
கடத்தூர்
கோபியில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிட்ட போது, தமிழகத்தில் ஆட்சி செய்த அனைத்து கட்சிகளின் ஊழலையும் வெளியிடுவேன் என்று கூறியது அவருடைய கருத்து. இது பா.ஜ.க.வுடனான கூட்டணிக்கு நெருக்கடியா? என்பதற்கு நான் பதில் கூற முடியாது. தி.மு.க.வின் ஊழல் பட்டியலை கவர்னரிடம் அ.தி.மு.க. கொடுப்பது குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் முடிவு செய்வார்.
கூட்டணியை பொறுத்தவரை அ.தி.மு.க. தலைமையும், பா.ஜ.க. டெல்லி தலைமையும்தான் முடிவு செய்யவேண்டும். மற்றவர்கள் கூட்டணியை முடிவு செய்ய வாய்ப்பில்லை.
பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக வனத்துறை சார்பில் 25 ஏக்கர் நிலம் வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். விரைவில் நிலம் பெற்றுத்தருவதாக அரசு சார்பில் உத்தரவாதம் அளித்துள்ளனர். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். கோபியை தலைமையாக கொண்டு மாவட்டம் உருவாக்க அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.