மத்திய அரசு வழங்கியதை போல் 4 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும்


மத்திய அரசு வழங்கியதை போல் 4 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும்
x

மத்திய அரசு வழங்கியதை போல் 4 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும் என மூத்த குடிமக்கள் சங்க கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூர்

அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர் சங்க கூட்டமைப்பின் கூட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. இதற்கு வட்ட தலைவர் சுந்தரேசன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் சிவசிதம்பரம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்களில் பொதுமக்கள் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் தமிழையே பயன்படுத்த வேண்டும். மத்திய அரசு வழங்கியதை போல் ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் 4 சதவீத அகவிலை படியை விரைந்து வழங்கிட வேண்டும். ஜெயங்கொண்ட சோழபுரத்தில் இயங்கி வரும் பொதுத்துறை வங்கியில் வாடிக்கையாளர்கள் அமர போதிய இருக்கை வசதி செய்வதுடன், டோக்கன் மூலம் பணப்பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story