மின்கம்பி உரசியதால், தும்பு ஏற்றி சென்ற லாரியில் தீப்பிடித்தது


மின்கம்பி உரசியதால், தும்பு ஏற்றி சென்ற லாரியில் தீப்பிடித்தது
x
தினத்தந்தி 16 Jun 2023 6:45 PM GMT (Updated: 16 Jun 2023 6:46 PM GMT)

மின்கம்பி உரசியதால், ஆலங்குளத்துக்கு தும்பு ஏற்றி சென்ற லாரியில் தீப்பிடித்தது.

தென்காசி

களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் பகுதியில் இருந்து, சேரன்மாதேவி வழியாக ஆலங்குளம் பகுதியில் உள்ள தனியார் ஆலைக்கு தேங்காய் தும்புகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. மேலச்செவல் வாணியங்குளம் பகுதியில் சென்றபோது அப்பகுதியில் உள்ள மின்கம்பியில் தேங்காய் தும்புகள் உரசியதில் திடீரென தீப்பிடித்தது. தொடர்ந்து தீ மளமளவென லாரி முழுவதும் பரவியது. இதையடுத்து லாரி டிரைவர் ஆலங்குளத்தை சேர்ந்த முருகானந்தம் (வயது 35), லாரியில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேரன்மாதேவி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இருப்பினும், லாரி முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது.


Next Story