பருவமழை தொடங்க உள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் மதகுகள் சீரமைக்கும் பணி தொடக்கம்


பருவமழை தொடங்க உள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் மதகுகள் சீரமைக்கும் பணி தொடக்கம்
x

செம்பரம்பாக்கம் ஏரியில் மதகுகளில் உள்ள ஷெட்டர்களில் மின் இணைப்புகள் மற்றும் மோட்டார்கள் போன்றவற்றை பழுது பார்த்து சரி செய்யும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.

காஞ்சிபுரம்

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது செம்பரம்பாக்கம் ஏரி. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தினந்தோறும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் ஆண்டுதோறும் பெய்து வரும் பருவ மழையின் போது செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் நிரம்பினால் அங்குள்ள மதகுகளின் வழியாக உபரி நீரானது வெளியேற்றப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் பருவ மழை தொடங்க உள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகள், ஷெட்டர்கள், கால்வாய்கள் போன்றவற்றை பராமரிக்கும் பணியானது தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில் செம்பரம்பாக்கம் ஏரியில் மதகுகளில் உள்ள சுவர்களுக்கு வண்ணம் தீட்டும் பணியும் உபரி நீர் திறக்க இருக்கும் 5 கண் மற்றும் 19 கண் மதகுகளில் உள்ள ஷெட்டர்களில் மின் இணைப்புகள் மற்றும் மோட்டார்கள் போன்றவற்றை பழுது பார்த்து சரி செய்யும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.

மேலும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் செல்லக்கூடிய தந்தி கால்வாய் உள்ளிட்ட பல்வேறு கால்வாய்கள் தூர்வாரப்பட்டு தயார் நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story