மின் கம்பியில் லாரி உரசியதால் மின்சாரம் பாய்ந்து டிரைவர் சாவு


மின் கம்பியில் லாரி உரசியதால்   மின்சாரம் பாய்ந்து டிரைவர் சாவு
x

டிரைவர் சாவு

ஈரோடு

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள வணவாசி, புதுப்பேட்டை காலனியை சேர்ந்தவர் கோபால் என்கிற சித்துராஜ் (வயது 53). இவர் கடந்த 2 வருடங்களாக பெருந்துறையில் டிப்பர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று சித்துராஜ் பெருந்துறையில் இருந்து ஈங்கூர் அருகே உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலைக்கு டிப்பர் லாரியை ஓட்டி சென்றார். அங்கு சென்ற பிறகு லாரியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மேலே சென்ற மின் கம்பியில் டிப்பர் லாரியின் பின்பகுதி உரசியது.

இதனால் மின்சாரம் தாக்கியதால் சித்துராஜ் தூக்கி வீசப்பட்டார். இதனால் மயக்கம் அடைந்த சித்துராஜை உடனடியாக அங்கு இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை ஐ.ஆர்.டி.டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே சித்துராஜ் பரிதாபமாக இருந்து விட்டார். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கி இறந்த சித்துராஜுக்கு மனைவி மற்றும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.


Next Story