பாலம் இல்லாததால் ஓடை தண்ணீரில் நீந்தியபடி இறந்தவரின் உடலை எடுத்து சென்ற உறவினர்கள்


பாலம் இல்லாததால் ஓடை தண்ணீரில் நீந்தியபடி இறந்தவரின் உடலை எடுத்து சென்ற உறவினர்கள்
x

பாலம் இல்லாததால் ஓடை தண்ணீரில் நீந்தியபடி இறந்தவரின் உடலை எடுத்து சென்ற உறவினர்கள்

ஈரோடு

அம்மாபேட்டை

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்த குறிச்சி சமத்துவபுரம் அருகே மயானம் உள்ளது. இந்த மயானத்தை சுப்பராயன்கொட்டாய் பகுதியை சேர்ந்த 150 குடும்பத்தினர் பயன்படுத்தி வந்தனர். இந்த மயானத்துக்கு செல்லும் வழியில் சித்தார் ஓடை உள்ளது. எனவே இந்த ஓடையை கடந்து தான் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல வேண்டும். தற்போது இந்த ஓடையில் 8 அடி ஆழத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இந்த நிலையில் சுப்பராயன்கொட்டாய் பகுதியை சேர்ந்த கோவில் பூசாரியான பெருமாள் (வயது 75) என்பவர் வயது முதி்ாவு காரணமாக காலமானார். எனவே அவரது உடலை அலங்கரிக்கப்பட்ட தேரில் உறவினர்கள் வைத்து உடக்கம் செய்வதற்காக மயானத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஓடையில் 8 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்ததால், வாழை மரத்தை வெட்டி, அதை மூங்கிலில் கட்டி அதில் இறந்தவரின் உடலோடு வைக்கப்பட்டிருந்த தேரை வைத்து கயிரால் கட்டி மிதக்க விட்டனர். இதைத்தொடர்ந்து உறவினர்கள் தண்ணீரில் நீந்தியபடி உடலை மறுகரைக்கு எடுத்து சென்று புதைத்தனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், 'சித்தார் ஓடையின் குறுக்கே பாலம் இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை தண்ணீரில் நீந்தியபடி எடுத்து சென்று தான் புதைத்து வருகிறோம். எனவே ஓடையின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும். அல்லது அந்த பகுதியில் உள்ள ஓடை புறம்போக்கு பகுதியில் உள்ள இடத்தை ஒதுக்கி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


Related Tags :
Next Story