வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா


வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா
x

தஞ்சை பெரிய கோவிலில் உள்ள வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூர்
தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், விநாயகர், கருவூரார், முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டீகேஸ்வரர் ஆகிய சன்னதிகள் உள்ளன. மேலும் வராகி அம்மன் தனி சன்னதியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இந்த வராகி அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட நவராத்திரி விழா 11 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 8-ந்தேதி வரை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து கணபதி அபிஷேகம், வராகி அபிஷேகம் நடைபெற்றது.

இனிப்பு அலங்காரம்

பின்னர் வராகி அம்மன் இனிப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து அம்மனுக்கு தினமும் அலங்காரமும், மாலையில் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

அம்மன் வீதி உலா

8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு அம்மன் நான்கு வீதிகளில் திருவீதி உலா நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் மற்றும் அரண்மனை தேவஸ்தான பணியாளர்கள், ஆஷாட நவராத்திரி விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


1 More update

Next Story