ஐ.என்.எஸ்.ராஜாளி கடற்படை விமான தளத்தில்அசோக் ராய் பயிற்சி வளாகம்


ஐ.என்.எஸ்.ராஜாளி கடற்படை விமான தளத்தில்அசோக் ராய் பயிற்சி வளாகம்
x

ஐ.என்.எஸ்.ராஜாளி கடற்படை விமான தளத்தில்அசோக் ராய் பயிற்சி வளாகத்தை பாதுகாப்பு அமைச்சக செயலர் கிரிதர் அரமனே திறந்து வைத்தார்.

ராணிப்பேட்டை

அரக்கோணம் ஐ.என்.எஸ்.ராஜாளி கடற்படை விமான தளத்தில் இருந்து நீண்ட தூர கடல்சார் கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர்ப் படை, ஹெலிகாப்டர் பயிற்சிப் பள்ளி ஆகியவை உள்ளன. மேலும், இந்த வளாகத்தில் அதிநவின பி8I விமானத்தின் பாதுகாப்பு செயல்பாடு மற்றும் பராமரிப்பை நோக்கமாகக் கொண்ட தொழில்நுட்ப பயிற்சிக்கான அதிநவீன சிமுலேட்டரும் உள்ளது. இந்நிலையில் 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் போது தேசத்திற்காக சிறந்த சேவைக்கான 'வீர் சக்ரா' விருது பெற்ற லெப்டினன்ட் கமாண்டர் அசோக் ராய் சேவையை போற்றும் வகையில் அவரது பெயரில் ஐ.என்.எஸ். ராஜாளியில் அமைக்கப்பட்ட அசோக் ராய் பயிற்சி சிமுலேட்டர் வளாக திறப்பு விழா நடந்தது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலர் கிரிதர் அரமனே கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி பயிற்சி வளாகத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு கடற்படை வைஸ் அட்மிரல் பிஸ்வஜித் தாஸ்குப்தா, கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி மற்றும் வைஸ் அட்மிரல் சஞ்சய் ஜஸ்ஜித் சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐ.என்.எஸ். ராஜாளி கமாண்டிங் ஆபீசர் கமோடர் கபில் மேத்தா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் லெப்டினன்ட் அசோக் ராய் குடும்பத்தினர், கடற்படை விமானத் தள அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story