சிவன் கோவில்களில் அஷ்டமி வழிபாடு


சிவன் கோவில்களில் அஷ்டமி வழிபாடு
x

சிவன் கோவில்களில் அஷ்டமி வழிபாடு நடந்தது.

கரூர்

புன்னம் சத்திரம் அருகே புன்னம் பகுதியில் உள்ள புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல், திருக்காடுதுறை, குந்தாணிபாளையம் நத்தமேடு மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களிலும் காலபைவரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story