சிவன் கோவில்களில் அஷ்டமி வழிபாடு
சிவன் கோவில்களில் அஷ்டமி வழிபாடு நடந்தது.
கரூர்
தவுட்டுப்பாளையம் அருகே நன்செய் புகழூரில் மேகபாலீஸ்வரர் கோவில் உள்ளது. வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு இக்ேகாவிலில் உள்ள காலபைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் புன்னம் புன்னைவனநாதர் கோவில், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை கோவில், நத்தமேடு ஈஸ்வரன் கோவில் உள்பட நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன்கோவில்களிலும் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story