அழகியநாச்சியம்மன் கோவில் தேரோட்டம்


அழகியநாச்சியம்மன் கோவில் தேரோட்டம்
x

அழகியநாச்சியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

பொன்னமராவதி:

பொன்னமராவதி அருகே தொட்டியம்பட்டியில் அழகியநாச்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது வந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைெபற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் அழகியநாச்சியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார். பின்னர் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரை பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story