வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆசிய காட்டு கழுதை உயிரிழந்தது


வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆசிய காட்டு கழுதை உயிரிழந்தது
x

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆசிய காட்டு கழுதை உயிரிழந்தது

செங்கல்பட்டு

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 13 வயதான ஏஞ்சல் என்ற பெண் ஆசிய காட்டு கழுதை லேமினிடிஸ் கால்குளம்பு பாதிப்பு நோய் காரணமாக அவதிப்பட்டு வந்தது. இதையடுத்து பூங்கா டாக்டர்கள் தொடர்ந்து ஆசிய காட்டு கழுதைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் பெண் காட்டு கழுதை சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தது.

பூங்காவில் காட்டு கழுதை இறந்ததை தொடர்ந்து பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கு நோய்த்தொற்று ஏற்படாதவாறு பூங்கா நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Next Story