திருமணமான 4 மாதத்தில் வரதட்சணை கேட்டு கொடுமை


திருமணமான 4 மாதத்தில் வரதட்சணை கேட்டு கொடுமை
x

திருமணமான 4 மாதத்தில் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய கணவன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூரை அடுத்த ப.முத்தம்பட்டியை சேர்ந்த முனிகண்ணனின் மகன் திருப்பதி (வயது 25). இவர் அதே பகுதியை சேர்ந்த விஜயனின் மகள் நீலாம்பரியை காதலித்து கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் திருப்பதி மற்றும் அவரது குடும்பத்தினர் நீலாம்பரியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நீலாம்பரி நேற்று திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கணவர் திருப்பதி, மாமனார் முனிகண்ணன், மாமியார் பிரபா, உறவினர்களான ராமன், அசோகன், வெண்ணிலா, விஜயா ஆகிய 7 பேர் மீது புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story