விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய ஏ.எஸ்.பி. மீது வழக்குப்பதிவு - கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு


விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய ஏ.எஸ்.பி. மீது வழக்குப்பதிவு - கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு
x

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் குற்றமிழைத்தோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை,

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் குற்றமிழைத்தோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில், விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி வதைத்த ஏ.எஸ்.பி., பல்பீர் சிங் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது. வதையில் ஈடுபட்ட அதிகாரியும், காவல்துறையினரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இருப்பினும், விரைவாக குற்ற வழக்கு பதிந்து சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை சிபிஐ(எம்) முன்வைத்தது. மனித உரிமையை முன்வைத்து இயங்கும் பல்வேறு இயக்கங்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வந்தன.

தற்போது தமிழ்நாடு அரசாங்கம், பல்பீர் சிங் மேற்கொண்ட கொடும் வதையினால் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிந்துள்ளது அவசியமான, வரவேற்க வேண்டிய நடவடிக்கையாகும்.

இந்த வழக்கினை முறையாக முன்னெடுத்து குற்றமிழைத்தோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமெனவும் சி.பி.ஐம்(எம்) சார்பில் தமிழ் நாடு அரசை வலியுறுத்துகிறோம்" என்று கூறியுள்ளார்.



Next Story