பட்டா கோருபவர்கள் 4-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
பட்டா கோருபவர்கள் 4-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- காளையார் கோவில் வட்டம் நாட்டரசன் கோட்டை கிராமத்தில் பொதுமக்களுக்கு பட்டா வழங்குவதற்காக கடந்த டிசம்பர் 22-ந் தேதி முதல் மனை வாடகை வருவாய் பின் தொடர் பணி தொடங்கப்பட்டு பொதுமக்களுக்கு பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் பட்டா கேட்டு மனுக்கள் கொடுப்பதற்கு வருகிற ஆகஸ்டு 4-ந் தேதி கடைசி நாள் ஆகும். நாட்டரசன் கோட்டை வருவாய் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தவறாது இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story