மது விற்றவர் சிக்கினார்


மது விற்றவர் சிக்கினார்
x
தினத்தந்தி 18 Jun 2023 7:00 PM GMT (Updated: 18 Jun 2023 7:00 PM GMT)
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பொ.துரிஞ்சிபட்டியில் உள்ள சினிமா தியேட்டர் அருகே பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரப்பன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்கி விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பொம்மிடி வினோபாஜி தெருவை சேர்ந்த ரஞ்சித் குமார் (வயது 42) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 32 மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story