சகோதரர்கள் மீது தாக்குதல்; 2 பேர் கைது
சகோதரர்கள் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ.நகர் கீழக்காலனி வடக்கு தெருவை சேர்ந்தவர் சங்கரன் மகன் கணேசன் (வயது 37). இவர் அங்கு பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு எதிரே ஜெ.ஜெ.நகரை சேர்ந்த பெருமாள் மகன் முருகன் (37) ஹாலோபிளாக் செங்கல் தயாரிக்கும் நிறுவனம் வைத்துள்ளார். இந்த நிறுவனத்தில் அதே ஊரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் மாரியப்பன் (39), பறையன்குளம் மேலத்தெருவை சேர்ந்த முனியாண்டி மகன் முகேஷ் (22) ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர்.
கடந்த 1 மாதத்திற்கு முன்பு மாரியப்பனுக்கும் கணேசனுக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை கணேசன் கடையில் இருக்கும் போது, அங்கு வந்த மாரியப்பன், முருகன், முகேஷ் ஆகியோர் கணேசனை கம்பால் தாக்கினர். இதனை தடுக்க வந்த அவரது சகோதரர் பிரகாஷையும் தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதில் காயமடைந்த கணேசன் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையிலும், பிரகாஷ் களக்காடு அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி, மாரியப்பன், முகேஷை கைது செய்தனர். மேலும் முருகனை தேடி வருகின்றனர்.