சரக்கு ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்


சரக்கு ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்
x

சரக்கு ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்

தஞ்சாவூர்

ஒரத்தநாட்டை அடுத்துள்ள திருமங்கலக்கோட்டை மேலையூர் கீழத்தெருவை சேர்ந்தவர் குபேந்திரன் (வயது 23). சரக்கு ஆட்டோ டிரைவரான இவர் சம்பவத்தன்று காலை நடவு வேலைக்காக பெண்களை கண்ணந்தங்குடி மேலையூர் கூனிக்காடு பகுதிக்கு ஆட்டோவில் அழைத்துச்சென்றார். செல்லும் வழியில் கூனிக்காடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் (32) என்பவருடைய வீட்டு நாய் மீது குபேந்திரன் ஓட்டிச்சென்ற ஆட்டோ மோதியது. இதில் அந்த நாய்க்கு கால் முறிவு ஏற்பட்டு காயம் அடைந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ், குபேந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். இதுகுறித்து குபேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story