கட்டிட தொழிலாளி மீது தாக்குதல்; 3 பேர் கைது


கட்டிட தொழிலாளி மீது தாக்குதல்; 3 பேர் கைது
x

ஆலங்குளம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி தாக்கப்பட்டது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மருதம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் (44). கட்டிட தொழிலாளி. இவர் நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு பைபாசில் நடந்துவரும் கட்டுமான பணியில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவருக்கும், அவருடன் வேலை செய்யும் கங்கைகொண்டான் அருகே உள்ள அணைத்தலையூரை சேர்ந்த மாரிமுத்து (30), குருக்கள்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (35), மதுரை மேலூர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் (32) ஆகியோருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் தர்மராஜை இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த தர்மராஜ் சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லை பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுவாதிகா வழக்குப்பதிவு செய்து மாரிமுத்து, மணிகண்டன், மாணிக்கம் ஆகியோரை கைது செய்தார்.


Next Story