மளிகைக்கடை உரிமையாளர் மீது தாக்குதல்
வடவள்ளி அருகே மளிகைக்கடை உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது
கோவை மருதமலை சாலை நவாவூர் அருகே மளிகைக்கடை வைத்து நடத்தி வருபவர் பாலாஜி (வயது 42). இவரது கடைக்கு எதிரே உள்ள நிறுவனத்தில் வேலை செய்யும் கோகுல்ராஜ் என்ப வர் பிஸ்கட் வாங்கி சாப்பிட்டு விட்டு சென்றார். அவர் சென்ற பிறகு சிறிது நேரம் கழித்து ஒருவர் வந்தார்.
அவர், கோகுல்ராஜ் பணத்தை தவற விட்டு சென்று விட்டதாகவும், அதை தர வேண் டும் என்றும் கேட்டு உள்ளார். உடனே அங்கு தேடிய போது ரூ.6 ஆயிரம் கிடந்தது.
அதை எடுத்த பாலாஜி, உங்களை யார் என்று தெரியாததால் பணத்தை தரமுடியாது. கோகுல்ராஜை வரச் சொல்லுங்கள் என்று கூறி உள்ளார்.
உடனே அந்த நபர் சென்று கோகுல்ராஜை அழைத்து வந்தார். அங்கு வந்த கோகுல்ராஜ், பாலாஜியிடம் ஏன் பணத்தை கொடுத்து அனுப்ப வில்லை என்று கேட்டு உள்ளார்.
இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 2 பேரும் சேர்ந்து பாலாஜியை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றனர். இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.