மினி பஸ் டிரைவர்-கண்டக்டர் மீது தாக்குதல்
மினி பஸ் டிரைவர்-கண்டக்டர் மீது தாக்குதல் நடத்திய ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டி பகுதியில் இயங்கும் மினி பஸ் டிரைவராக விசுவநாதபேரியைச் சேர்ந்த கதிரேசன் (வயது 25) என்றவர் இருந்து வருகிறார். அதே பஸ்சில் கண்டக்டராக ஆவாரம்பட்டியைச் சேர்ந்த தங்கப்பாண்டி இருந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மினிபஸ் வன்னியம்பட்டி விளக்கு அருகே வரும்போது ஆட்டோ டிரைவர்களிடம் பயணிகள் ஏற்றுவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. பின்பு மினி பஸ் வன்னியம்பட்டி வ.உ.சி. சிலை அருகே நிறுத்தி இருக்கும்போது ஆட்டோ டிரைவர்கள் பால்பாண்டி, செந்தில், பார்த்திபன் உள்பட 6 பேர் கொண்ட கும்பல் மினி பஸ் டிரைவர் கதிரேசன் மற்றும் கண்டக்டர் தங்கப்பாண்டி ஆகியோரை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த தங்கப்பாண்டியும் டிரைவர் கதிரேசனும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த மோதல் தொடர்பாக வன்னியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆறு பேர் கொண்ட கும்பலை தேடி வருகிறார்கள்.