தாய்-மகன் மீது தாக்குதல்


தாய்-மகன் மீது தாக்குதல்
x

வீீட்டுவாசலில் நின்று மதுபோதையில் சத்தம் போட்டதை தட்டிக்கேட்ட தாய்-மகனை தாக்கிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவாரூர்

கொரடாச்சேரி:

வீீட்டுவாசலில் நின்று மதுபோதையில் சத்தம் போட்டதை தட்டிக்கேட்ட தாய்-மகனை தாக்கிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மதுபோதையில் சத்தம் போட்டனர்

திருவாரூர் சாப்பாவூரைச் சேர்ந்தவர் சுந்தரி (வயது 50). இவரது மகன் விஜயன் (31). அதே ஊரை சேர்ந்த தினகரன், அருண்குமார், வேணுகோபால் ஆகிய 3 பேரும் சம்பவத்தன்று குடிபோதையில் சுந்தரி வீட்டு வாசலில் நின்று சத்தம் போட்டு கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த சுந்தரி ஏன் எனது வீட்டுக்கு வாசலில் நின்று சத்தம் போடுகிறீர்கள்? என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சுந்தரியை திட்டி உள்ளனர்.

தாக்குதல்

தாயாரை திட்டியதை பார்த்த விஜயன், அவர்களை தட்டிக்கேட்டுள்ளார். இதை தொடர்ந்து 3 பேரும் சேர்ந்து சுந்தரி மற்றும் விஜயனை தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவாரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினகரன், அருண்குமார், வேணுகோபால் ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story