கன்னங்குறிச்சியில்கடன் கேட்டு வாலிபர் மீது தாக்குதல்
கன்னங்குறிச்சியில் கடன் கேட்டு வாலிபரை தாக்கிய ௨ பேர் குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்
கன்னங்குறிச்சி
கன்னங்குறிச்சி கேசவன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் (வயது30). இவரிடம் கன்னங்குறிச்சி சேர்ந்த 2 பேர் கடன் கேட்டு உள்ளனர். தன்னிடம் பணம் இல்லை என கூறியதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 2 பேரும் தமிழரசனை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து உதைத்து உள்ளனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசில் தமிழரசன் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story