வாலிபர் மீது தாக்குதல்


வாலிபர் மீது தாக்குதல்
x

வாலிபரை தாக்கியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருநெல்வேலி

ஏர்வாடி:

திருக்குறுங்குடி அருகே நம்பிதலைவன்பட்டயம் கீழத்தெருவை சேர்ந்தவர் கொம்பையா மகன் இசக்கிபாண்டி (வயது 32). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் இசக்கிதுரைக்கும் (39) இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று இசக்கிபாண்டி அங்குள்ள பிள்ளையார் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இசக்கிதுரைக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த இசக்கிதுரை, இசக்கிபாண்டியை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றிய புகாரின் பேரில் திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இசக்கிதுரையை தேடி வருகின்றனர்.


Next Story