பெண் மீது தாக்குதல்


பெண் மீது தாக்குதல்
x

பெண்ணை தாக்கியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் மேலத்தெருவை சேர்ந்தவர் செல்லையா மனைவி பிரம்மம்மாள் (வயது 65). அதே பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி கிருஷ்ணன் (50). இவருக்கு சொந்தமான ஆடு, மாடுகள் அதே ஊரைச் சேர்ந்த பட்டு என்பவரது பருத்தி தோட்டத்தில் மேய்ந்துள்ளது. இதனைதொடர்ந்து பட்டு, கிருஷ்ணனின் மனைவியிடம் சென்று ஆடு, மாடுகளை இங்கு மேய்க்கக்கூடாது என்று கண்டித்துள்ளார். இதற்கு பிரம்மம்மாள் தான் காரணம் என கருதிய கிருஷ்ணன், பிரம்மம்மாளை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கிருஷ்ணனை தேடி வருகிறார்.


Related Tags :
Next Story