பெண் மீது தாக்குதல்


பெண் மீது தாக்குதல்
x

மோகனூர் அருகே சொத்து தகராறில் பெண்ணை தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நாமக்கல்

மோகனூர்

மோகனூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட ராசிபாளையம் ஊராட்சி இலுப்பமரத்து தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் காளியம்மாள், கண்ணம்மாள். இவரது அண்ணி சகுந்தலா (வயது 42). இவர்களுக்குள் ஏற்கனவே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சகுந்தலா விவசாய நிலத்தில் உழவு ஓட்டிக் கொண்டிருந்ததார். அப்போது அங்கு வந்த காளியம்மாள், கண்ணம்மாள் வழக்கு நடந்துகொண்டிருக்கிறபோது ஏன் உழவு ஓட்டுகிறாய் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள், அவரது குடும்பத்தை சேர்ந்த மேட்டுகாட்டூர், லோகேஷ் (35) புவனேஷ், பணங்காட்டூர் இந்துமதி ஆகியோர் சகுந்தலாவை தரக்குறைவாகவும், தகாத வார்த்தைகளாலும் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சகுந்தலா மோகனூர் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 5 பேரை தேடி வருகின்றனர்.


Next Story