பெண் மீது தாக்குதல்
களக்காடு அருகே பெண் மீது தாக்குதல் நடந்தது.
திருநெல்வேலி
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் தேவேந்திரன் தெருவை சேர்ந்தவர் சுந்தரநயினார். இவரது மனைவி அமுதகனி (வயது 27). சம்பவத்தன்று அமுதகனி வீட்டு அருகே உள்ள பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவிக்குமாா் (32) என்பவருக்கும் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரவிக்குமார், அமுதகனியை அவதூறாக பேசி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அமுதகனி சிகிச்சைக்காக களக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ரவிக்குமாரை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story