தியாகதுருகம் அருகேசொத்தை பிரித்து தராததால் பெண் மீது தாக்குதல்மகன், மருமகள் உள்பட 4 பேர் கைது
தியாகதுருகம் அருகே சொத்தை பிரித்து தராததால் பெண் மீது தாக்கிய மகன், மருமகள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனா்.
தியாகதுருகம்,
தியாகதுருகம் அருகே முடியனுர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 55). இவருக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் இரண்டு மகன்களுக்கும் திருமணம் நடந்து, தனித்தனியே வசித்து வருகிறார்கள்.
முருகேசன் அவரது மனைவி தனக்கோடி, மகள் மங்கை ஆகியோருடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் மூத்த மகன் கோவிந்தராஜ்(40) என்பவர் சொத்தை பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று முருகேசனிடம் அவ்வப்போது கேட்டு வந்துள்ளார்.
சம்பவத்தன்று தனக்கோடி தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது கோவிந்தராஜ், தனது மனைவி தங்கமணி (32), உறவினர்களான கள்ளக்குறிச்சி அருகே நிறைமதி கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் (50), இவரது மனைவி தவமணி (48) ஆகியோருடன் சென்று சொத்தை பிரித்து தருமாறு கேட்டு, தனக்கோடியை அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனக்கோடி கொடுத்த புகாரின் பேரில் கோவிந்தராஜ், தங்கமணி, தங்கராஜ், தவமணி ஆகிய 4 பேர் மீதும் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.