திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் மீது தாக்குதல்
தியாகதுருகம் அருகே திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணை தாக்கிய அவரது காதலன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்
கண்டாச்சிமங்கலம்
விவாகரத்து
திருவள்ளுவர் மாவட்டம் கூவத்தூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுரங்கன் மகள் சங்கீதா(வயது 27). இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தியாகதுருகம் அருகே பேரால் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு கணவன், மனைவி இருவரும் விவாகரத்து பெற்றனர்.
கள்ளக்காதல்
இந்நிலையில் பேரால் கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் பாலகிருஷ்ணன் என்பவர் சங்கீதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அடிக்கடி பேசி வந்தார். இதனால் நாளடைவில் இவர்கள் இருவரும் காதலித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று சங்கீதா பேரால் கிராமத்தில் உள்ள பாலகிருஷ்ணன் வீட்டுக்கு சென்று அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன், அவரது உறவினர்கள் அய்யப்பன், இவரது மனைவி சத்யா ஆகியோர் சேர்ந்து அவரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
3 பேர் மீது வழக்கு
பின்னர் இதுகுறித்து சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் பாலகிருஷ்ணன், அய்யப்பன், சத்யா ஆகிய 3 பேர் மீதும் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.