தொழிலாளி மீது தாக்குதல்

சாத்தான்குளம் அருகே தொழிலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகேயுள்ள பனைக்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் யாக்கோபு (வயது 66). தொழிலாளி. இவரது மகன் கிறிஸ்டோபர். இவர் கடந்த கொரோனா தொற்று காலத்தில் அதே பகுதியை சேர்ந்த ஆசீர்வாதம் மகன் மான்சிங் என்பரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இந்த கடனை திருப்பி கேட்டதால் மான்சிங்கிற்கும், கிறிஸ்டோபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று யாக்கோபு பேய்க்குளம் பகுதியில் மோட்டார் ைசக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மான்சிங், அவரது சகோதரர் செல்வசிங், தந்தை ஆசீர்வாதம் ஆகிய 3பேரும் அவரை வழிமறித்து தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதில் காயம் அடைந்த யாக்கோபு, சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் மான்சிங் உள்ளிட்ட 3 பேர் மீதும் சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






