பெண்ணை தாக்கி 1½ பவுன் சங்கிலி பறிப்பு

சிறுகனூர் அருகே பெண்ணை தாக்கி 1½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிறுகனூர் அருகே பெண்ணை தாக்கி 1½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சங்கிலி பறிப்பு
சிறுகனூர் அருகே உள்ள பாலையூரை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் வடக்கு கவுண்டர் தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரி (வயது 40). இவர் நேற்று முன்தினம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து திருப்பட்டூருக்கு நடந்து வந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம ஆசாமிகள் திடீரென்று அவரை தாக்கினர். இதில் தடுமாறி கீழே விழுந்த பரமேஸ்வரியிடம் இருந்து ஒரு பவுன் தங்க சங்கிலி, அரை பவுன் தோடு மற்றும் காலில் அணிந்திருந்த கொலுசு ஆகியவற்றை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
வலைவீச்சு
இது குறித்து பரமேஸ்வரி சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலி பறித்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.