பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்
பொள்ளாச்சி அருகே குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சகோதரர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சகோதரர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
குடிநீர் பிடிப்பதில் தகராறு
பொள்ளாச்சி அருகே நாகூரை சேர்ந்தவர் முத்துசாமி என்பவரின் மனைவி கலைவாணி (வயது 27). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கலாவதி என்ற பெண்ணும் குடிநீர் பிடிக்க வந்தார். இந்த நிலையில் குடிநீர் பிடிப்பதில், கலைவாணிக்கும், கலாவதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கலாவதியின் மகன்கள் ஜெகதீஷ் (40), பாலாஜி ஆகிய 2 பேரும் கலைவாணியை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.
2 பேருக்கு வலைவீச்சு
இந்த சம்பவம் குறித்து கலைவாணி வடக்கிபாளையம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்்தி வழக்குப்பதிவு செய்து, பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஜெகதீஷ், பாலாஜி ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.