மண்புழு உரம் தயாரிக்கும் பணியை உதவி இயக்குனர் ஆய்வு
மண்புழு உரம் தயாரிக்கும் பணியை உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
அடுக்கம்பாறை
மண்புழு உரம் தயாரிக்கும் பணியை உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
வேலூரை அடுத்த பென்னாத்தூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் மண்புழு உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குனர் செ.கணேஷ் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்கள், திட்டப் பணிகளின் விவரம், முன்னேற்ற நிலை குறித்து செயல் அலுவலரிடம் கேட்டறிந்தார். மேலும் வரி மற்றும் வலியற்ற இனங்களின் வசூல் விவரம் குறித்து ஆய்வு செய்து வரி வசூல் பணியினை நிலுவையின்றி விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
சாலையோரத்தில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு பிரதமமந்திரி சுயநிதி திட்டத்தின்கீழ் வங்கி மூலம் ரூ.10 ஆயிரம் கடனுதவி வழங்க தகுதியான நபர்களை தேர்வு செய்ய வேண்டும். வருகிற 30-ந் தேதிக்குள் 67 நபர்களுக்கு சுயநிதி பெற்று கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது அவர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது பென்னாத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் கி.அர்ச்சுணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.