ஊராட்சிகளில் உதவி இயக்குனர் ஆய்வு


ஊராட்சிகளில் உதவி இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 17 Jun 2023 6:45 PM GMT (Updated: 17 Jun 2023 6:46 PM GMT)

திருவாடானை யூனியனில் ஊராட்சிகளில் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம்

திருவாடானை,

திருவாடானை யூனியன் மங்களக்குடி, நகரிகாத்தான், என்.எம்.மங்கலம் ஊராட்சிகளில் ராமநாதபுரம் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பரமசிவம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அலுவலகத்தில் பதிவேடுகளை பார்வையிட்ட அவர் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் குடிநீர், பொது சுகாதாரம், பேவர் பிளாக் சாலை அமைத்தல், புதிய கட்டிடங்கள் கட்டும் பணி போன்ற வளர்ச்சி பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஊராட்சிக்கு தேவையான குடிநீர் வசதி, மின்சாரம், பொது சுகாதாரம் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் அவர் ஊராட்சி தலைவர்களிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர்கள் மங்கலக்குடி அப்துல் ஹக்கீம், பவுலின் மேரி, தமிழ்ச்செல்வி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story