பொள்ளாச்சி சரகத்தில் முதல் முறையாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு
பொள்ளாச்சி சரகத்தில் முதல் முறையாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு
பொள்ளாச்சி
பொள்ளாச்சி போலீஸ் சரக துணை சூப்பிரண்டாக கடந்த சில மாதங்களுக்கு முன் தீபசுஜிதா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் திடீரென்று சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து புதிய உதவி போலீஸ் சூப்பிரண்டாக பிருந்தா பொறுப்பு ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர் போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார். புதிதாக பொறுப்பு ஏற்று கொண்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா பெங்களூருவை சேர்ந்தவர் ஆவார். அவர் கடந்த 2019-ம் ஆண்டு யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றார். ஐ.பி.எஸ். அதிகாரியான அவர் தஞ்சாவூரில் பயிற்சி பெற்றார். இதை தொடர்ந்து பொள்ளாச்சி உதவி சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். பொள்ளாச்சி சரகத்திற்கு இதுவரைக்கும் துணை சூப்பிரண்டு ரேங்கில் உள்ள போலீஸ் அதிகாரிகளே நியமிக்கப்பட்டு வந்தனர். தற்போது முதல் முறையாக ஐ.பி.எஸ். அதிகாரி பொள்ளாச்சி சரகத்தில் உதவி சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.