விதை பண்ணையில் வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு


விதை பண்ணையில் வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 8 Oct 2023 12:15 AM IST (Updated: 8 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் பகுதி விதை பண்ணையில் வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் வட்டாரத்தில் காரீப் பருவத்தில் வேளாண்மை துறை மூலம் மணிலா, உளுந்து ஆகிய விதை பண்ணைகள் எருமனூர், சின்னவடவாடி, தொட்டிக்குப்பம், சின்னக்கண்டியாங்குப்பம், குப்பநத்தம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விதை பண்ணைகளில் கடலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கிருந்த விவசாயிகளிடம் கூறுகையில், மணிலா, உளுந்து விதை பண்ணை அமைத்து, அதன் மூலம் கிடைக்கும் விதையினை வேளாண்மை துறை அலுவலகத்தில் வழங்கும், விவசாயிகளுக்கு சந்தை விலையுடன், தேசிய எண்ணை வித்து இயக்கம் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் (பயறு வகை) மூலம் கிலோ ஒன்றுக்கு ரூ.25 கொள்முதல் மானியம் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.இந்த ஆய்வின்போது வேளாண்மை உதவி இயக்குனர் விஜயகுமார், விதை அலுவலர் இளந்திரையன், அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் மதிவாணன் மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் பலர் உடன் இருந்தனர்.


Next Story