அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு


அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு
x

கலவை அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.

ராணிப்பேட்டை

கலவை அரசு மருத்துவமனையில் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் விஜயா முரளி ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனையில் வாரத்திற்கு ஒரு நாள் கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்ய வேண்டும். புதன் வெள்ளி ஆகிய நாட்களில் குழந்தைகள் பரிசோதனை, ஸ்கேன் செய்ய வேண்டும்.் மருத்துவமனையை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தோல் நிபுணர் விவேக், மருத்துவ அதிகாரி வெண்ணிலா, டாக்டர்கள் சதீஷ்குமார், இளவரசி, செவிலியர்கள் ஸ்ரீதேவி, ஆனந்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story