தர்மபுரியில்ஏ.ஐ.டி.யூ.சி. ஆஷா பணியாளர் சங்க கூட்டம்
தர்மபுரி
தர்மபுரி
தர்மபுரியில் ஏ.ஐ.டி.யூ.சி. ஆஷா பணியாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மேனகா தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் தீபா வரவேற்றார். நிர்வாகிகள் ருத்ரா, கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தேவராசன், மாவட்ட துணை செயலாளர் மாதேஸ்வரன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொது செயலாளர் மணி, மாவட்ட துணை செயலாளர் சுதர்சனன், உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மனோகரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். ஆஷா பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். அடையாள அட்டை, அரசு பஸ்களில் இலவச பயண அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டன.
Related Tags :
Next Story