விடுதி பணியாளர் சங்க கூட்டம்
விடுதி பணியாளர் சங்க கூட்டம் நடந்தது
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதி பணியாளர் சங்க கூட்டம் சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். துணை தலைவர் முனீஸ்வரன், மாவட்ட செயலாளர் மீனாட்சி சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிறப்பு நிலை சமையலர் மற்றும் காவலர் தேர்வு நிலை சமையலர் மற்றும் காவலர் என்பவற்றை விடுதி வருகை பதிவேட்டில் பெயரின் கீழ் பதிவு செய்ய வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் சமையலர் மற்றும் காவலர்களை பணி மாறுதல் செய்ய வேண்டும். புதிதாக பணியில் சேர்ந்த சமையலர்களுக்கு பணி வரன்முறை செய்து தகுதிக்கான பருவம் வழங்க வேண்டும். சமையலர்களுக்கு தலைக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உடைகளை தர வேண்டும். 10 ஆண்டுகளாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கல்லூரி விடுதிகளில் காலியாக உள்ள இரவு காவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சமையலர்களுக்கு கலந்தாய்வு முறையில் பணி மாறுதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பொருளாளர் சிவப்பிரகாசம் நன்றி கூறினார்.