சத்துணவு ஊழியர் சங்க கூட்டம்
சத்துணவு ஊழியர் சங்க கூட்டம் நடந்தது
எஸ்.புதூர்
எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 16-வது ஒன்றிய பேரவை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக சங்க கொடியேற்று விழா நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் மலைச்சாமி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சிதம்பரம் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொருளாளர் அழகம்மாள் வரவு, செலவு அறிக்கை மற்றும் தீர்மானங்களை வாசித்தார். இதில் முக்கிய தீர்மானமாக எஸ்.புதூர் ஒன்றியத்தில் அரசு கலைக்கல்லூரி அமைத்தல், சிங்கம்புணரி முதல் முசுண்டப்பட்டி வழியாக பஸ் வசதி ஏற்படுத்துதல், எஸ்.புதூர் ஒன்றியத்தில் தீயணைப்பு நிலையம் அமைத்தல், எஸ்.புதூரில் பஸ் நிலையம் அமைத்தல், மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புழுதிப்பட்டியில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து பணி நிறைவு பெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்.புதூர் ஒன்றிய சேர்மன் விஜயா குமரன், துணை சேர்மன் வீரம்மாள் பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்குமார், சத்யன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் பாலசுப்பிரமணியன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளர்கள் பாண்டி, கற்பகவள்ளி உள்பட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்துணவு ஜெயசூர்யா நன்றி கூறினார்.