சுகாதார ஆய்வாளர்கள் சங்க கூட்டம்


சுகாதார ஆய்வாளர்கள் சங்க கூட்டம்
x

சுகாதார ஆய்வாளர்கள் சங்க கூட்டம்

திருவாரூர்

திருவாரூரில் தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் செல்வன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜ்குமார் வரவேற்றார். கூட்டத்தில், 300 நபர்களுக்கு மேற்பட்டோர் உள்ள நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் சுகாதார ஆய்வாளர்கள் பதவி நிரப்புவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாநில பொருளாளர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.


Next Story