அந்தியூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.3 லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம்


அந்தியூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.3 லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம்
x

அந்தியூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.3 லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம் போனது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், வேம்பத்தி, எண்ணமங்கலம், கோவிலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 1,760 வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

கதலி வாழைப்பழம் (கிலோ) ஒன்று 22 ரூபாய்க்கும், நேந்திரன் வாழைப்பழம் 33 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. பூவன் (தார் ஒன்று) ரூ.370-க்கும், செவ்வாழை ரூ.650-க்கும், ரஸ்தாளி ரூ.600-க்கும், தேன்வாழை ரூ.420-க்கும், ரொபஸ்டா ரூ.260-க்கும், மொந்தன் ரூ.320-க்கும் விற்பனை ஆனது. வாழைத்தார்கள் மொத்தம் ரூ.3 லட்சத்து 8 ஆயிரத்துக்கு ஏலம் போனது. ஈரோடு, திருப்பூர், கோவை, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து வாழைத்தார்களை ஏலம் எடுத்து சென்றனர்.

1 More update

Related Tags :
Next Story