அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ரூ.22¾ லட்சத்துக்கு ஏலம்


அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ரூ.22¾ லட்சத்துக்கு ஏலம்
x

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ரூ.22¾ லட்சத்துக்கு ஏலம் போனது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ரூ.22¾ லட்சத்துக்கு ஏலம் போனது.

விவசாய விளைபொருட்கள்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளை பொருட்கள் ஏலம் நடைபெற்றது. இதற்கு அந்தியூர், அத்தாணி, கள்ளிப்பட்டி, வேம்பத்தி, ஒலகடம், வெள்ளித்திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாய விளைபொருட்களை கொண்டு வந்திருந்தனர்.

பருத்தி 885 மூட்டைகள் வந்தன. இது (குவிண்டால்) குறைந்தபட்சமாக ரூ.7ஆயிரத்து 709-க்கும், அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 99-க்கும் என மொத்தம் ரூ.17 லட்சத்து 96 ஆயிரத்து 143-க்கு விற்பனை செய்யப்பட்டது. தேங்காய் 4 ஆயிரத்து 237 தேங்காய்கள் கொண்டு வரப்பட்டன. இது (கிலோ) குறைந்தபட்சமாக 17 ரூபாய் 25 காசுக்கும், அதிகபட்சமாக 22 ரூபாய் 25 காசுக்கும் என மொத்தம் 56 ஆயிரத்து 115 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

ரூ.22¾ லட்சத்துக்கு விற்பனை

கொப்பரை தேங்காய் 58 மூட்டைகள் வந்தன. இது (குவிண்டால்) குறைந்தபட்சமாக ரூ.7ஆயிரத்து 439-க்கும், அதிகபட்சம் ரூ.8 ஆயிரத்து 229-க்கும் என மொத்தம் ரூ.1லட்சத்து 59 ஆயிரத்து 896-க்கு விற்பனை செய்யப்பட்டது. எள் 29 மூட்டைகள் ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன. இது (குவிண்டால்) குறைந்தபட்சமாக ரூ.14 ஆயிரத்து 589-க்கும், அதிகபட்சமாக ரூ.16 ஆயிரத்து 369-க்கும் என மொத்தம் ரூ.2 லட்சத்து 66 ஆயிரத்து 40-க்கு விற்பனை செய்யப்பட்டது. விவசாய விளைபொருட்கள் ரூ.22 லட்சத்து 78 ஆயிரத்து 194-க்கு விற்பனை செய்யப்பட்டது.

1 More update

Next Story