அந்தியூரில், ஒரே லாரியில்15 மாடுகள்-2 கன்றுக்குட்டிகளை ஏற்றிய 2 பேர் மீது வழக்குப்பதிவு


அந்தியூரில், ஒரே லாரியில்15 மாடுகள்-2 கன்றுக்குட்டிகளை ஏற்றிய 2 பேர் மீது வழக்குப்பதிவு
x

அந்தியூரில், ஒரே லாரியில் 15 மாடுகள்-2 கன்றுக்குட்டிகளை ஏற்றிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் புதுப்பாளையம் குருநாதசாமி கோவிலில் ஒரே லாரியில் இடைவெளியின்றி 15 மாடுகளையும், 2 கன்றுக்குட்டிகளையும் லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். ஆனால் அவைகளுக்கு குடிப்பதற்கு போதுமான குடிநீர், தீவன வசதி மற்றும் கால்நடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்று அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த கலாநிதி, டி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் லாரியுடன் 15 மாடுகள் மற்றும் 2 கன்றுக்குட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவை திங்களூர் கோசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.


Related Tags :
Next Story