அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனை


அந்தியூர் கால்நடை சந்தையில்  கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனை
x

அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனை ஆனது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனை ஆனது.

கால்நடை சந்தை

அந்தியூரில் கால்நடை சந்தை நடைபெற்றது. இந்த சந்தைக்கு அந்தியூர், அம்மாபேட்டை, மேட்டூர், கொளத்தூர், பண்ணப்பாடி, தர்மபுரி, மேச்சேரி, எடப்பாடி, மாதேஸ்வரன் மலைப்பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகளை ஏராளமான விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதில் நாட்டு பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.60 ஆயிரத்துக்கும், சிந்து பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.20 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.40 ஆயிரத்துக்கும், ஜெர்சி இன பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.25 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.50 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

ரூ.1¾ லட்சம்

கொங்கு காளை மாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும், பர்கூர் இன செம்மை நிற பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.15 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.25 ஆயிரத்துக்கும், எருமை மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.70 ஆயிரத்துக்கும், கன்றுக்குட்டி ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.5 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.15 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், திருப்பூர், கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து மாடுகளை விலைபேசி பிடித்து சென்றனர்.


Related Tags :
Next Story