அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனை


அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனை
x

அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனை ஆனது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனை ஆனது.

கால்நடை சந்தை

அந்தியூரில் கால்நடை சந்தை நேற்று நடைபெற்றது. இந்த சந்தைக்கு அந்தியூர், அம்மாபேட்டை, ஈரோடு, மேட்டூர், கொளத்தூர், பண்ணவாடி, எடப்பாடி, கொங்கணாபுரம், தருமபுரி, பர்கூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களுடைய மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதில் நாட்டு பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.75 ஆயிரத்துக்கும், ஜெர்சி பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.20 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.40 ஆயிரத்துக்கும், சிந்து பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.50 ஆயிரத்துக்கும், எருமை மாடு ஒன்று அதிகபட்ச விலையாக ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.75 ஆயிரத்துக்கும், பர்கூர் இன செம்மை நிற பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.10 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.20 ஆயிரத்துக்கும், கன்றுக்குட்டி ஒன்று ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

ரூ.1¾ லட்சம்

காங்கேயம் காளை மாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.75 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்துக்கும், கொங்கு காளை மாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.75 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும், பர்கூர் இன செம்மை நிற காளை மாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.25 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.50 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இங்கு வந்து மாடுகளை விலைபேசி பிடித்து சென்றனர்.


Next Story